வழியெது ?
பல்லவி
வழியிதுவென்று சொன்ன அடியாரின் வழிசென்று
அழகன் கேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
வழி காட்டியாய் விளங்கும் வேதங்கள் சொன்ன
வழி நின்று தொழுது நாமங்களோதி
சரணம்
விழியில் காணும் மாயா உலகும்
அழிகின்ற மேனியும் பொருள் புகழ் போகமும்
அழிந்த பின் நம்மாவி அழியா நிலைபெறவே
அழிவிலாதவன் பதமடைந்திட வேண்டியே
No comments:
Post a Comment