Thursday, 6 November 2014

துதிக்கையன்


                துதிக்கையன் 



                     பல்லவி 

          உதிக்கின்ற கதிரவனின் ஒளியையும் மிஞ்சும்

          துதிக்கையன் மலரடியை மனமாரத் துதித்தேன்

                     அனுபல்லவி

           இதிகாச வேதபுராணங்கள்  போற்றும்

           கதிர்வேலன் சோதரனைக் கேசவன் மருகனை 

                         சரணம்

            துதிப்பவர்க்கருள் தரும் வாரண முகனை

            மதியணிந்தவனை  கணங்களின் தலைவனை

           சதுர்முகனும் நந்தியும் கணங்களும் தேவரும்

           எதிர் நின்று வணங்கிடும் ஆனைமுகத்தோனை


           
            

No comments:

Post a Comment