ஸ்ரீ ரங்கநாயகி
பல்லவி
நாயகியுனையே நாளும் துதித்தேன்
தாயே தயவளிக்க வேண்டுமென - அரங்க
அனுபல்லவி
நீயிரங்காவிடில் வேறெனக்காருளார்
தூயவளே புகல் நீயே - கேசவன்
சரணம்
ஓய்வின்றி உனது திருநாமம் துதித்தேன்
நோயெனும் பவ வினைப் பயன்களை நீக்கி
சேயெனக்காத்திட இதுவே தருணம்
மாயே மரகதமே - ஸ்ரீ ரங்க
No comments:
Post a Comment