பேரருளாளன்
பல்லவி
வரதராஜனைப் பேரருளாளனை
தேவாதி ராஜனை மனமாரத் துதித்தேன்
துரிதம்
நரர்சுரர் நாரதர் நான்முகனனந்தன்
சுகசனகாதியர் பிருகுவும் பணிந்திடும்
அனுபல்லவி
வரம் தரும் கேசவனை பரவாசுதேவனை
பெருந்தேவித் தாயார் உடனிருந்து போற்றும்
சரணம்
பிரமனுக்கருள் செய்த அத்திகிரி வரதனை
அரனுமிந்திரனும் கஜேந்திரனும் துதித்த
பரந்தாமனைப் பாற்கடல் வாசனை
சரணடைந்தோர்க்கருளும் கருணா மூர்த்தியை
No comments:
Post a Comment