மதவாரணமுகன்
பல்லவி
புதுவித கோலத்தில் காட்சியளித்திடும்
மதவாரணமுகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சதுர்முகனும் தேவரும் முனிவரும் நந்தியும்
சதுர்மறையும் கணங்களும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
யதுகுலதிலகன் கேசவன் மருகனை
மதுர மோதகப் பிரியனைக் கரிமுகனை
கதிர்வேலன் தமையனை ஆனைமுகத்தோனை
எதிரிடுமிடர் வினை அனைத்தும் நீங்கிட
No comments:
Post a Comment