அடியேன்
பல்லவி
அடியார்க்கடியவனாய் அடியேனைப் படைத்திடவுன்
அடிபணிந்து மனமார அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
கொடிய அரக்கரை கொன்றொழித்தவனே
நெடுமாலே கேசவனே திருவேங்கடமுடையானே
சரணம்
நெடிய கொடிமரமாய் கோவில் திருவிளக்காய்
கொடியாகச் சோலையில் மலர் தரும் செடியாக
படியாக கிடந்து ஏதேனும் ஒருவகையில்
அடியார்க்குத் தொண்டு செய்யும்படியாக என்னை
No comments:
Post a Comment