அம்ருதவல்லி
பல்லவி
அருள் தருமன்னை மகாலக்ஷ்மியை
அம்ருதவல்லியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
திருமால் கேசவன் மணிமார்பில் வீற்றிருக்கும்
திருமகளை அலைமகளை கருணைக் கடலை
சரணம்
பொருள் புகழ் போகமனைத்தையுமளித்திடும்
பெருமைமிகு நிலமகளை சமுத்திர குமாரியை
இருவினைப் பயன்களால் படுந்துயர் நீக்கி
இருள் சூழென் வாழ்வு ஒளியுற வேண்டுமென
No comments:
Post a Comment