தனலக்ஷ்மி
பல்லவிதனம் தரும் லக்ஷ்மியை தனலக்ஷ்மியைப் பணிந்தேன்
மனம் கனிந்தெனக்கருள வேண்டுமெனத் துதித்து
துரிதம்
தினகரன் சந்திரன் நரர்சுரர் நாரதர்
அனங்கன் பிரமனிந்திரன் வணங்கிடும்
அனுபல்லவி
வனமாலையணிந்த கேசவனின் மணிமார்பில்
வனப்புடன் வீற்றிருக்கும் திருமகளை அலை மகளை
சரணம்
தினகரனொளியினும் ஒளிமிகுந்தவளை
அனங்கனினழகையும் மிஞ்சுமழகுடையவளை
அனைத்து வேத புராணங்களும் போற்றும்
வனிதையை கடல் மகளை வழிகாட்டுமன்னையை
No comments:
Post a Comment