செண்பக விநாயகன்
பல்லவிசெண்பக விநாயகனை மனமாரத் துதித்தேன்
கண்கவரழகுடன் கோயில் கொண்டிருக்கும்
அனுபல்லவி
விண்ணோரும் மண்ணோரும் நந்தியும் கணங்களும்
எண்ணிலா முனிவருமிந்திரனும் வணங்கிடும்
சரணம்
பண்ணிசை நாட்டியக் கலைகளை ரசித்திடும்
புண்ணிய மூர்த்தியைக் கேசவன் மருகனை
வெண்ணிலவின் பிறையணிந்த ஆனைமுகத்தோனை
சண்முகன் சோதரனை சங்கரன் மைந்தனை
No comments:
Post a Comment