அழகிய கணபதி
பல்லவி
காண்பவர் மனங்களை களிப்புறச் செய்திடும்
மாண்புடைய கணபதியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
வேண்டுவோர் வேண்டும் வரங்களை அளித்திடும்
ஆண்டவனைக் கரிமுகனை கணங்களின் தலைவனை
சரணம்
ஆண்டியாய் நின்ற கந்தனின் சோதரனை
பாண்டவர் நேசன் கேசவன் மருகனை
தாண்டவம் புரிந்திடும் ஈசன் சிவன் மகனை
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்
No comments:
Post a Comment