சங்கரி சுதன்
பல்லவி
சகலரும் வணங்கிடும் சங்கரி சுதனை
மகாகணபதியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
அகத்தியரும் கபிலரும் அவ்வையும் புகழ்ந்தேத்தும்
பகலவனையும் மிஞ்சும் ஒளியுடடைய ஐங்கரனை
சரணம்
பகைவரை நடுங்க வைக்கும் வேழமுகத்தோனை
குக சோதரனைக் கேசவன் மருகனை
அகில உலகையும் காத்திடும் கரிமுகனை
புகலவன் பங்கயப் பதமென நினைந்து
No comments:
Post a Comment