அய்ங்கரன்
பல்லவி
அருகம்புல் மாலை சூடிய அய்ங்கரனை
இருவினையறுப்பவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கருமாமுகில் வண்ணன் கேசவன் மருகனை
பெருவயிற்றானை ஆனைமுகத்தோனை
சரணம்
பெருவெளி காற்று நிலம் நீர் நெருப்பென
உருக்கொண்ட கரிமுகனை விக்ன விநாயகனை
இருள்சூழென் வாழ்வில் ஒளிவிளக்காய் வந்து
அருள் தர வேண்டுமென அவன் பதம் பணிந்து
No comments:
Post a Comment