Wednesday, 31 December 2014

கோவிந்தா கண்ணுறங்கு

       கோவிந்தா கண்ணுறங்கு


முத்தே கண்ணுறங்கு

முத்துமணி பெத்தெடுத்த

ரெத்தினமே கண்ணுறங்கு

 புத்தம் புதுப் பொன்னே மாமணியே நீயுறங்கு

 சித்திரமே  நித்திலமே கண்ணே கண்ணுறங்கு

 அத்தை மகள் சீர்பெறவே காத்திருக்கும் நீயுறங்கு

  சித்தப்பன் சீராட்டும் குலவிளக்கே கண்ணுறங்கு

   முத்தப்பன் தத்தெடுத்த பசும் பொன்னே உறங்கு

   அத்தனைக்குமாளான ஆணி முத்தே கண்ணுறங்கு

   கத்தும் கடல் நடுவே கிடந்த நீ இறங்கிவந்து

   இத்தரையில் எனக்காகப் பிறந்தவனே கண்ணுறங்கு

    மத்தாடும்  தயிர் வெண்ணை உண்டவனே கண்ணுறங்கு

    தித்திக்கும் பெயர் கொண்ட உத்தமனே கண்ணுறங்கு

    சித்தத்தை ஆட்டிவைக்கும் சீராளா கண்ணுறங்கு

     பத்து விதமாயுதித்த  திருமாலே  நீயுறங்கு

     நித்திலத் தொத்தே வேங்கடவா கண்ணுறங்கு

     எத்திசையும் புகழ் விளங்கும் மலையப்பா கண்ணுறங்கு

      வித்தகர் புகழ்ந்தேத்தும் கோவிந்தா கண்ணுறங்கு

No comments:

Post a Comment