ஸ்ரீ அஷ்டதச புஜ மகாலக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி(கந்தாஸ்ரமம் )
பல்லவி
பதினெண் கரத்தாளை ஈச்வரியை லக்ஷ்மியை
எதிர் நின்று கரம் கூப்பி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கதிரவனொ ருகோடி ஒளியை விடவும்
அதிகம் தேசுடைய லலிதாம்பிகையை
சரணம்
சதுர்மறையும் தேவரும் கேசவனுமீச்வரனும்
சதுர்முகனும் முனிவர்களும் பணிந்தேத்தும் அன்னையை
அதிசய வடிவுடைய அரவிந்த பதத்தினளை
கதியவள் பதமென அனுதினம் பணிந்து
No comments:
Post a Comment