ஒற்றைக்கொம்பன்
பல்லவி
மலர் வடிவில் காட்சி தரும் ஆனைமுகத்தோனை
வலம்புரி கணபதியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தலம் வந்து வலம் வந்து பணிந்திடும் பக்தருக்கு
நலம் பலவும் அளித்திடும் விக்ன விநாயகனை
சரணம்
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனை
அலகிலா விளையாடல் பல புரிந்தவனை
நிலவின் பிறையணிந்த ஒற்றைக் கொம்பனை
கலைகளை ரசிப்பவனை கேசவன் மருகனை
No comments:
Post a Comment