ஸ்ரீ ரங்கநாயகி
பல்லவி
மங்காத புகழ் மேவும் ரங்கநாயகியை
எங்கும் நிறைந்தவளை மனமாரத் துதித்தேன்
துரிதம்
சங்கரி சரஸ்வதி இந்திரன் நாயகி
மங்கையரனைவரும் மகிழ்வுடன் பணிந்திடும்
தங்கநிற மேனியளைப் பாற்கடலிலவதரித்த
பங்கயச் செல்வியை மகாலக்ஷ்மியை
சரணம்
பொங்கரவணை மீது பாங்குடனே கிடந்துறங்கும்
செங்கண்மால் கேசவன் மணிமார்பையலங்கரிக்கும்
செங்கமலவல்லியை தேவரும் முனிவரும்
அங்கம் கரைந்தடி பணிந்த்தேத்தும்
No comments:
Post a Comment