விநாயகன்
பல்லவி
ஒற்றைக் கொம்பனை மனமாரத் துதித்தேன்
முற்றும் துறந்து பற்றறுத்திடவே
அனுபல்லவி
நற்றவ முனிவரும் தேவரும் பணிவோனை
கற்றிடுமடியவர் புத்தியிலுறைபவனை
சரணம்
புற்றுறையீசன் பரமசிவன் மகனை
வெற்றிக்கு வித்தான விக்ன விநாயகனை
எத்திசையும் புகழ் விளங்கும் ஆனமுகத்தோனை
உற்ற துணை அவனிரு பதமெனத் துணிந்து
No comments:
Post a Comment