முந்தி விநாயகன்
பல்லவி
பருப்பும் இனிப்பும் கலந்தணிந்த கணபதியை
ஆனைமுகத்தோனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வருந்தித் துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
விரும்பும் வரங்களை அள்ளி அளித்திடும்
சரணம்
கருமங்கள் புதிதாய் தொடங்கும் முன்னனைவரும்
ஒருதடையும் குறையும் நேராதிருக்க
முதன் முதல் பணிந்திடும் முந்தி விநாயகனை
கருணைக் கடலை கேசவன் மருகனை
No comments:
Post a Comment