பெருவயிற்றோன்
பல்லவி
கருணைக்கடலே விக்ன விநாயகா
திருவடி பணிந்தேன் தயை புரிந்திடுவாய்
அனுபல்லவி
அருகம் புல்லும் எருக்க மாலையும்
விரும்பி ஏற்றிடும் வேழமுகத்தோனே
சரணம்
செருக்கழித்தரக்கன் கயமுகனைக்கொன்றவனே
அருந்தவ முனிவரும் அமரரும் போற்றும்
உருவில் பெரியவனே பெரு வயிற்றோனே
திரு மகள் மார்பன் கேசவன் மருகா
No comments:
Post a Comment