செங்கண்மால்
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் திருவேங்கடமுடையானை
பங்கய கரத்தானை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வங்கக் கடல் கடைந்து அமரருக்கமுதளித்த
செங்கண்மால் கேசவனைத் திருமகள் மார்பனை
சரணம்
சங்கும் சக்கரமும் கையிலேந்தும் கேசவனை
தங்கக் கிரீடமும் குண்டலமுமணிந்தவனை
பங்கய நாபனைப் பட்டுடை தரித்தவனை
பொங்கரவணை துயில் மகாவிஷ்ணுவை
No comments:
Post a Comment