விக்ன விநாயகன்
பல்லவி
கேசவன் மருகா விக்ன விநாயகா
நேசமுடன் உனையே மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
ஈசன் சிவனும் அன்னை பார்வதியும்
ஆசையுடன் கொஞ்சிடும் ஆனைமுகத்தோனே
சரணம்
வாசமலர் மாலைகளும் அணிமணி ஆரங்களும்
தேசுடை நிலவின் பிறையுமணிந்தவனே
ஆசாபாசத் தளைகளைக் களைந்திட
நீசநெனக்கருள வேண்டுமெனத் துதித்து
No comments:
Post a Comment