வேழமுகன்
பல்லவி
இடர் நீக்கும் சுடரை விக்ன வினாயகனை
பட அரவணிந்தவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கடல் நடுவே துயிலும் கேசவன் மருகனை
நடன நாட்டிய சங்கீத ரசிகனை
சரணம்
தொடங்கும் சடங்குகள் கருமங்களனைத்தும்
தடையின்றி நடந்திட அனைவரும் வணங்கிடும்
விடை வாகனன் மகனை வேழ முகத்தோனை
புடமிட்ட பொன்னைப் புவி போற்றும் கணபதியை
No comments:
Post a Comment