முகில் வண்ணன்
பல்லவி
குழலும் மயிலிறகும் ஆலிலையும் கண்ணன்
அழகு முகம் காட்டுவதைக் கண் குளிரக் கண்டேன்
அனுபல்லவி
பழகு தமிழ் மொழியில் பாமாலை புனைந்து
மழலையில் அவன் புகழை பாடிட விழைந்தேன்
சரணம்
பழகிடும் கோபியரும் ஆயர்குலத்தோரும்
அழலேந்தும் சிவனும் நான்முகனும் நரர்சுரரும்
கழல் பணிந்து தொழுதேத்தும் முகில்வண்ணன் கேசவன்
நிழலவன் அரவிந்த பதமென்று துதித்தேன்
No comments:
Post a Comment