திருமகள்
பல்லவி
தங்கமயமானவளை மகாலக்ஷ்மியை
மங்களம் தந்தருள வேண்டுமெனத் துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் திருமுகத்தாளைத் திருவென்னும் பெயராளை
தங்கும் பொருள் தருபவளை எங்கும் நிறைந்தவளை
சரணம்
சங்கும் சக்கரமும் கையிலேந்தும் கேசவனின்
பங்கயமலர் மார்பையலங்கரிக்கும் திருமகளை
சங்கரியும் சரஸ்வதியும் நேசிக்கும் அலைமகளை
பங்கய பதத்தாளை செங்கமல வல்லியை
No comments:
Post a Comment