வஞ்சுளவல்லி (திருநறையூர்)
பல்லவி
அஞ்சேலென்று அபயகரம் காட்டும்
வஞ்சுளவல்லியைத் தஞ்சமடைந்தேன்
அனுபல்லவி
நஞ்சரவணை தனில் துஞ்சிடும் கேசவன்
நெஞ்சினில் வீற்றிருக்கும் நம்பிக்கை நாச்சியாரை
சரணம்
அஞ்சுவித அடையாளம் அடியார்க்கருளிய
கஞ்சனைக்காய்ந்தவனை கரம் பிடித்த மங்கையை
நஞ்சுண்டன் நாயகியும் கலைமகளும் கருடனும்
நெஞ்சாரப் போற்றும் ஸ்ரீ மகா லக்ஷ்மியை
திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்)
--------------- --------------- --------------- --------------
'அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.'
-திருமங்கையாழ்வ ார்.
கும்பகோணம் - குடவாசல் மார்க்கத்தில் சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலம் வைணவர்களின் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். திருநறையூர் என்று புராணத்திலும் நாச்சியார் கோயில் என்று வழக்கிலும் பெயர் கொண்ட இத்திருக்கோயில் 14ஆவது சோழத் திருப்பதியாகும் .
தலபுராணம்
எம்பெருமான் அனந்த நாராயணனை மருமகனாக அடையவேண்டி மேதாவி என்னும் முனிபுங்கர் தவமிருக்க, அவருக்கு மஹாலஷ்மியே மகளாக வந்து பிறக்க, அக்குழந்தைக்கு அவர் வஞ்சுளாதேவி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தக்க பருவத்தில், அவளை மணம் புரிய ஸ்ரீமன் நாராயண மூர்த்தியானவர் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என பஞ்ச வடிவமெடுத்து அலைமகளைப் புவியில் தேட, பெரிய திருவடியான கருடாழ்வார் இவ்விடத்திலே அவளைக் கண்டு சொல்ல, விஷ்ணுவும் மேதாவியிடம் பெண் கேட்டு வந்தார். எவரைத் தன் மருமகனாக அடைய ஏங்கினாரோ அந்த ஏகசக்ராதிபதியான எம்பிரானே எதிரில் வரவும், முனிவர் தன் மகளை மணக்க நிபந்தனை இடலானார். அவளை மணந்தால், இத்தலத்தில் எழுந்தருள வேண்டும் என்றும் எப்போதும் அவள் சொல்படியே நடக்க வேண்டும் என்றும் விதிக்க, அதற்குக் கட்டுப்பட்டு வாசுதேவன் பிராட்டியாரை மணந்தார் என்பது இத்தல வரலாறு.
மனைவி சொல்லே மந்திரம் என்பதை எடுத்துக் காட்டும் பொருட்டு, இங்கு தாயார் நின்ற திருக்கோலத்தில் இடுப்பில் சாவிக்கொத்துடன் எம்பெருமானுக்கு ச் சற்று முன்னதாகவே காட்சி தருகிறார். ஊர்வலத்தின்போது ம் முன்னதாகத் தாயாரும் பின்னர் பெருமாளும் வரும் விந்தையை இங்கு காணலாம். திருச்சி உறையூரைப் போலவே இத்தலமும் தாயாரின் பெயர் கொண்டு நாச்சியார் கோயில் என்றே வழங்கப்பெறுகிறத ு.
வைணவர் அல்லாதிருந்தும் தன் மீது கொண்ட பக்தியால் தன்னடியவரான திருமங்கையாழ்வா ருக்கு பெருமாளே இங்கு ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்து வைத்தார் என்பது வரலாறு. இத்தலத்துப் பெருமாளை நூறு பதிகங்களுக்கும் மேலாகப் பாடி திருமங்கையாழ்வா ர் நம்பி என்றே மங்களாசாசனம் செய்து வைத்தார்.
படைப்புத் தொழிலில் ஒரு முறை தவறிழைத்து முனிவர்களின் சாபத்துக்குள்ளா ன நான்முகன் இங்கு சங்கர்ஷண தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான்.
இந்திரன் அனிருத்த தீர்த்தத்தில் நீராடி, தன் சாபங்களைக் களைந்து கொண்டான்.
சாம்பதீர்த்தத்த ில் சப்தரிஷிகளும் பெருமாளை நோக்கித் தவமிருந்தனர்.
பானுதத்தன் என்னும் ராஷஸன் பெருமாளின் திருவடியை அடைந்து தன் பாவங்களை அறுத்து, எம்பிரானுடன் ஐக்கியமானது இவ்விடத்தில்தான ்.
சைவ மதத்தவனான கோச்செங்கட்சோழன ் தன் கனவில் வந்து பெருமாள் உரைத்தபடி சிவன் கோயில் பாணியில் யாழிகளுடன் மாடக் கோயிலாக இதைக் கட்டினான் என்று கூறுவர். இதனால், இது மணிமாடக் கோயில் என்றும் வழங்குகிறது.
மூலவர் திருநறையூர் நம்பியாவார். உற்சவர் இடர்கடுத்த் திருவாளன்.
தாயாரின் திருப்பெயர் வஞ்சுளவல்லி. உற்சவத்தாயார் நாச்சியார் ஆவார்.
தலச்சிறப்பு
கருடர் வந்து முதலில் பெண் பார்த்த காரணத்தால், இங்கு கருடசேவை மிகச் சிறப்புப் பெற்றதாகும். வியாழக் கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சார்த்தி, அர்ச்சனை செய்தால் விவாகப்ராப்தி உண்டாகும்; புத்திரபாக்கியம ் கிட்டும் என்பது நம்பிக்கை.
பஞ்சகிருஷ்ண திருக்கோயில்களி ல் முதலாவதான இக்கோயில், இங்கு வந்து சேவிப்போருக்கு பிறவித்தளை அறுத்து முக்தி தரும் தலமுமாகும்.
முன்னோர்கள் சாபம், தெய்வக் குற்றம் ஆகியவற்றால் விளையும் துன்பங்கள் போக்கும் நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள நாலு தீர்த்தங்களிலும ் நீராடி நம்பியைச் சரண்டைந்தோர்க்க ு நானாவித தோஷங்களும் விலகி நற்காலம் பிறக்கும் என்பது திண்ணம்.
தலப்பண்
தன்மனை யாள்தேடி வைகுந்தம் நீங்கிப்பின்
பொன்னேர் நிறத்தாளை பொற்கிளி கொண்டாளை
மின்னும் சுடராளை மேதினியிற் கண்டாங்கு
தன்னையே ஈந்து திருமணம் செய்தவள்சொல்
என்றும் தவறாது எம்பிரான் காட்சிதரும்
நம்பிவந் தாண்டானென் நா.
ஓம் நமோ நாராயணா!
---------------
'அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.'
-திருமங்கையாழ்வ
கும்பகோணம் - குடவாசல் மார்க்கத்தில் சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலம் வைணவர்களின் 108 திவ்யதேசங்களுள்
தலபுராணம்
எம்பெருமான் அனந்த நாராயணனை மருமகனாக அடையவேண்டி மேதாவி என்னும் முனிபுங்கர் தவமிருக்க, அவருக்கு மஹாலஷ்மியே மகளாக வந்து பிறக்க, அக்குழந்தைக்கு அவர் வஞ்சுளாதேவி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தக்க பருவத்தில், அவளை மணம் புரிய ஸ்ரீமன் நாராயண மூர்த்தியானவர் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என பஞ்ச வடிவமெடுத்து அலைமகளைப் புவியில் தேட, பெரிய திருவடியான கருடாழ்வார் இவ்விடத்திலே அவளைக் கண்டு சொல்ல, விஷ்ணுவும் மேதாவியிடம் பெண் கேட்டு வந்தார். எவரைத் தன் மருமகனாக அடைய ஏங்கினாரோ அந்த ஏகசக்ராதிபதியான
மனைவி சொல்லே மந்திரம் என்பதை எடுத்துக் காட்டும் பொருட்டு, இங்கு தாயார் நின்ற திருக்கோலத்தில்
வைணவர் அல்லாதிருந்தும்
படைப்புத் தொழிலில் ஒரு முறை தவறிழைத்து முனிவர்களின் சாபத்துக்குள்ளா
இந்திரன் அனிருத்த தீர்த்தத்தில் நீராடி, தன் சாபங்களைக் களைந்து கொண்டான்.
சாம்பதீர்த்தத்த
பானுதத்தன் என்னும் ராஷஸன் பெருமாளின் திருவடியை அடைந்து தன் பாவங்களை அறுத்து, எம்பிரானுடன் ஐக்கியமானது இவ்விடத்தில்தான
சைவ மதத்தவனான கோச்செங்கட்சோழன
மூலவர் திருநறையூர் நம்பியாவார். உற்சவர் இடர்கடுத்த் திருவாளன்.
தாயாரின் திருப்பெயர் வஞ்சுளவல்லி. உற்சவத்தாயார் நாச்சியார் ஆவார்.
தலச்சிறப்பு
கருடர் வந்து முதலில் பெண் பார்த்த காரணத்தால், இங்கு கருடசேவை மிகச் சிறப்புப் பெற்றதாகும். வியாழக் கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சார்த்தி, அர்ச்சனை செய்தால் விவாகப்ராப்தி உண்டாகும்; புத்திரபாக்கியம
பஞ்சகிருஷ்ண திருக்கோயில்களி
முன்னோர்கள் சாபம், தெய்வக் குற்றம் ஆகியவற்றால் விளையும் துன்பங்கள் போக்கும் நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள நாலு தீர்த்தங்களிலும
தலப்பண்
தன்மனை யாள்தேடி வைகுந்தம் நீங்கிப்பின்
பொன்னேர் நிறத்தாளை பொற்கிளி கொண்டாளை
மின்னும் சுடராளை மேதினியிற் கண்டாங்கு
தன்னையே ஈந்து திருமணம் செய்தவள்சொல்
என்றும் தவறாது எம்பிரான் காட்சிதரும்
நம்பிவந் தாண்டானென் நா.
ஓம் நமோ நாராயணா!
No comments:
Post a Comment