கந்தசோதரன்
பல்லவிஇந்தப் பாரா முகமேனோ என் மீது
கந்த சோதரனே கனிந்தருள் புரிவாய்
அனுபல்லவி
நந்தகுமாரன் கேசவன் மருகனே
இந்தினிளம்பிறை சூடிய கரிமுகனே
சரணம்
தந்தையும் தாயும் குருவும் தோழனும்
சொந்தமனைத்தும் நீயென நினைந்து
சந்ததம் உந்தன் நாமமே துதித்தேன்
வந்தனை புரிந்துன் பதமே பணிந்தேன்
No comments:
Post a Comment