ஆராவமுதன்
பல்லவி
தீரா வினை தீர்க்கும் ஆராவமுதனை
சாரங்கபாணியை மனமாரத்துதித்தேன்
துரிதம்
நாரதர் நான்முகன் சுகசனகாதியர்
நரர்சுரரிந்திரன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
காரார் குழலாள் கோமள வல்லி போற்றும்
ஓராயிரம் நாமமுடைய கேசவனை
சரணம்
மாறாத பக்தியுடன் துதித்திடுமடியார்க்கு
தாராளமாய் வரங்கள் அள்ளி அளித்திடும்
நாராயணனை நான்மறைப் பொருளை
பாரோர் புகழ்ந்தேத்தும் திருக்குடந்தை தலத்துறையும்
No comments:
Post a Comment