சிவம்
பல்லவிஎல்லோர்க்கும் மேலான எந்தையே சிவமே
நல்லருள் வேண்டியே கேசவன் துதித்தேன்
அனுபல்லவி
கல்லாலடித்தவர்க்கும் காலாலுதைத்தவர்க்கும்
வில்லாலடித்தவர்க்கும் அருள் தந்த சிவமே
சரணம்
சொல்லாலுனைப் பாடி மனமாரத் துதித்திடும்
நல்லடியார் மனத்துறையும் சோதியே சிவமே
நல்லோர் நினைவில் நடமிடும் சிவமே
வல்லரக்கன் திரிபுரனை வதம் செய்த சிவமே
எல்லா நலன்களும் எனக்களிக்கும் சிவமே
இல்லா இடமே இல்லாத சிவமே
கல்லார் கற்றவர் பணிந்திடும் சிவமே
எல்லா மறைகளும் போற்றும் சிவமே
நில்லாவுலகில் நின்றருளும் சிவமே
தொல்லை துயர் துடைக்கும் சுடரே சிவமே
பொல்லாரைப் பொடிப் பொடியாய்ச் செய்திடும் சிவமே
தில்லையம்பலத்திலாடிடும் சிவமே
No comments:
Post a Comment