சங்கரி
பல்லவி
சாமகானம்தனில் மனம் மயங்கிடும்
சங்கரி உந்தன் மலர்ப் பதம் பணிந்தேன்
துரிதம்
நாமகள் பூமகள் தேவர்கள் முனிவர்கள்
யாவரும் துதித்திடும் அகிலாண்டேச்வரி
அனுபல்லவி
தாமதமின்றியே எனக்கருள வேண்டுமென
காமாட்சி கௌரி உனையே துதித்தேன்
சரணம்
அகிலமனைத்தையும் ஆண்டிடும் தாயே
சுகமும் துக்கமும் அளித்திடும் மாயே
இகபரமிரண்டிலும் என் துணை நீயே
சகலரும் வணங்கிடும் கேசவன் சோதரி
No comments:
Post a Comment