மாயே
பல்லவி
காத்தருள்வேன் என்று சொன்னதும் நீயே
காத்திட வைத்து வதைப்பதும் நீயே
அனுபல்லவி
நேத்திரம் திறந்தெனை பார்த்திட வேண்டியே
தோத்திரம் செய்துனைத் துதித்தேன் மாயே
சரணம்
பாத்திரமறிந்து பிச்சையிடும் நல்ல
சாத்திரமறிந்தவள் நீயே தாயே
கோத்திரம் குலமென்று வேற்றுமை பாராமல்
ஏற்றருள்வாயே கேசவன் சோதரி
No comments:
Post a Comment