வடுவூர் கோதண்டராமன்
பல்லவி
கோசலை மைந்தனே கோதண்டராமனே
வடுவூர்த் தலத்திலுனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
நேசக்கரம் நீட்டி ஆசையுடன் என்னை
கேசவனே உன்னோடு சேர்த்தருள வேண்டுமென
சரணம்
ஆசான் தோழன் நீ அன்னை தந்தையும் நீ
பேசும் தெய்வம் நீ கலியுகக்கடவுள் நீ
பாசத்தளைகளையும் மாசற்ற ஈசன் நீ
வீசும் தென்றல் நீ பூவில் வாசம் நீ
No comments:
Post a Comment