நாராயணா
பல்லவி
ஓராயிரம் நாமம் ஓதியழைத்தேனே
பாராமுகம் ஏன் நாராயணா
அனுபல்லவி
வாராமலும் வரம் தாராமலும்
இருந்தாலும் உந்தன் திருவடியே சரணம்
சரணம்
மீராவும் ஆண்டாளும் உன்னை அழைத்தே
ஏராளம் காத்திருந்த கதைகள் அறிவேன்
தீராவினை தீர்க்கும் சீராளா உனக்காக
ஆராவமுதே கேசவனும் காத்திருப்பேன்
No comments:
Post a Comment