காணக்காண
பல்லவி
காணக்காண மனம் களிக்குதே கண்ணா
காளிங்கன் தலைமீது நின்றாடும் உன்னழகை
(தக்கிடதரிகிட தளாங்கு தகதிமி
தரிகிட தகவென ஜதியோடு குதிபோட்டு
காளிங்கன் தலைமீது..........)
அனுபல்லவி
வேணுகானலோலனே கேசவா
சாணுரன் முஷ்டிகனை வதைத்தவனே மாதவா
சரணம்
பொன்மாலை பூமாலை கழுத்தில் அசைந்தாட
மின்னும் கௌத்துபமும் துளபமும் சேர்நதாட
சின்னச்செவியிரண்டில் குண்டலங்களாட
இன்னும் மயில்பீலி கொண்டைதனிலாட
நன்முத்து மணிகளுடன் காலில் சிலம்பாட
வண்ணப்பட்டாடைகளும் வளக்கரமுமாட
தன்னைமறந்த வண்ணம் கோபிகைகளாட
புன்னகை முகத்துடனே கோபர்களுமாட
No comments:
Post a Comment