அதிலாவண்ய ராமன்
பல்லவி
துதித்தேன் உந்தன் பன்னிருதிருநாமம்
கதிநீயேயென்று திருவடி பணிந்து
அனுபல்லவி
உதித்திடும் கதிரவன் ஒளியையும் மிஞ்சும்
அதிலாவண்யனே கோதண்டராமா
சரணம்
எதிர்க்கும் பகைவனையும் அன்புடன் நேசிக்கும்
நிதியே கருணைக் கடலே கேசவா
உதிர்க்கும் புன்னகை முகத்துடன் விளங்கும்
பதியே பங்கயப்பாதனே ஶ்ரீராமா
No comments:
Post a Comment