राम राम रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥
ஶ்ரீராமநாமம்
பல்லவி
சொன்னாலும் வாயினிக்கும் ஶ்ரீராமநாமம்
என்னாளும் எப்போதும் உளமாரத்துதித்து
அனுபல்லவி
தன்னாலே நிம்மதி மனசாந்தி அனைத்தும்
தானாகத்தேடிவரும் துதிப்பவர்க்கெல்லாம்
சரணம்
பன்னகசயனன் கேசவனின் ஆயிரம்
நாமங்கள் சொன்ன பலன் அனைத்தும் கிடைத்திட
அந்நாளில் சிவபெருமான் அன்னை பார்வதிக்கு
சொன்னவழி இந்த ஶ்ரீராமநாமமே
No comments:
Post a Comment