வேங்கடமுடையான்
பல்லவி
கமலநாபனின் கமலக்கண்ணனின்
கமலப்பதங்களை மனமாரத்துதித்தேன்
துரிதம்
கமலாலயனும் நமச்சிவாயனும்
அமரேந்திரனும் அமரரும் போற்றும்
அனுபல்லவி
கமலமலர்க்கரத்தில் வெண்சங்கும் சக்கரமும்
சுமந்து நிற்கும் திருவேங்கடமுடையான்
சரணம்
இயலிசை நாடகக் கலைகளின் ரசிகன்
கயல்விழி அலமேலுமங்கை மணாளன்
தயையுடன் அடியார் நலங்களைக் காப்பவன்
பயமிடர் பிணிகளைக் களைந்திடும் கேசவன்
No comments:
Post a Comment