ஶ்ரீ ரகுராமா
பல்லவி
என்னைக் காத்தருள்வாய் ஶ்ரீரகுராமா
உன்னையே துதித்திடும் ஏழையேன் உனதடிமை
அனுபல்லவி
அன்னை தந்தை குரு அனைத்தும் நீயே
தென்னிலங்கை அரக்கனை வதம் செய்தவனே
சரணம்
அன்றொருநாள் சபரிக்கு மோட்சம் தந்தவனே
இன்னொரு மங்கையின் சாபம் தீர்த்தவனே
தந்தையின் சொல் கேட்டுக் கானகம் சென்றவனே
கன்னலே கேசவா திருவடி சரணடைந்தேன்
No comments:
Post a Comment