வெங்கடேசன்
பல்லவி
வெங்கடேசனே கண்கண்ட தெய்வம்
கலியுகந்தன்னில் உலகிலனைவர்க்கும்
அனுபல்லவி
எங்கும் நிறைந்தவனாய் ஏழை எளியார்க்கு
தங்கும் பொருள் தந்து தனிக்கருணை பொழியும்
சரணம்
திங்கள் திருமுகம் திருமார்பில் கௌஸ்துபம்
சங்கும் சக்கரமும் ஏந்திய திருக்கரங்கள்
பொங்கும் கருணைவிழி எழில் கொஞ்சும் திருமேனி
நங்கை அலமேலு கரம்பிடித்த கேசவன்
No comments:
Post a Comment