கோவிந்தன் நாமமே
பல்லவி
கோவிந்தா என்றே துதி என் நாவே
கோவிந்தன் நாமமே கேட்கப் பேரின்பமே
அனுபல்லவி
கோவிந்தனே நம் குறைகளைத் தீர்ப்பவன்
கோவிந்தனே உலகம் அனைத்தையும் காப்பவன்
சரணம்
கோவிந்தா என்றாலே பாவங்கள் நீங்கும்
கோவிந்தா எனச் சொன்னால் பவவினை தீரும்
கோவிந்தா கேசவா என்றழைத்தாலே
தாவி ஓடோடி வந்து தயவளித்திடுவான்
No comments:
Post a Comment