கற்பகாம்பிகை
பல்லவி
பர்வதராஜகுமாரி பார்வதி
சர்வமும் நீயென்றே உனைச்சரண்டைந்தேன்
அனுபல்லவி
கர்மவினைகளால் கட்டுண்ட என்னை
விடுவிக்க வேண்டுமென விண்ணப்பம் செய்தேன்
சரணம்
அற்பவாழ்வு சதமென நினைந்து
கற்பனை உலகில் மனம் மகிழ்ந்திருந்தேன்
வெற்பறையன் மகளே கேசவன் சோதரி
கற்பகமே மனம் வருந்தித் துதித்தேன்
No comments:
Post a Comment