மீனாக்ஷி
பல்லவி
தாமதமின்றி தாயே எனக்கருள்வாய்
தாமரைப் பதம் பணிந்தேன் அங்கயற்கண்ணி
அனுபல்லவி
மாமறையறியேன் வழிபாடு செய்திலேன்
பாமரன் உன்றன் நாமமே துதித்தேன்
சரணம்
தேமதுரத்தமிழ் முழங்கும் தென்மதுரைத்திருத்தலத்தில்
சோமசுந்தரருடன் ஒயிலாக வீற்றிருந்து
மாமதுரை அரசாளும் மாதவமே மீனாக்ஷி
மாமாயன் கோவிந்தன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment