காஞ்சி காமாட்சி
பல்லவி
கருணை புரிவாய் காமாட்சி
இருள்சூழென் வாழ்வு ஒளியுறச்செய்திட
அனுபல்லவி
பெருமைக்குரிய காஞ்சி மாநகர் வாழ்
வரதராஜன் கேசவன் சோதரி
சரணம்
ஒரு நாளும் உன் புகழ் உரைத்தவனில்லை
தரும தானங்கள் செய்ததுமில்லை
கரும வினைப்பயனால் அடைந்தேன் தொல்லை
வருந்தி மனம் திருந்தி உனைச்சரணடைந்தேன்
No comments:
Post a Comment