ஶ்ரீகாமாட்சி
பல்லவி
உன்னைத்துதித்தேன் ஶ்ரீகாமாட்சி
என்னைக் காத்தருள வேண்டுமெனக் கோரியே
அனுபல்லவி
பன்னகாபரணன் மனங்கவர் நாயகி
பன்னகசயனன் கேசவன் சோதரி
சரணம்
அன்னையே உன்னருள் தரவில்லையாகில்
என் செய்வேன் நான் எங்கு செல்வேன்
உன்னிரு கழலடி நிழலில் விழுவேன்
அம்மா அம்மாவென்று அழுவேன் தொழுவேன்
No comments:
Post a Comment