குறையொன்றுமில்லை கோவிந்தா
பல்லவி
எனக்கொன்றும் குறையில்லை கோவிந்தா
உனது திருவடியைச் சரண்டைந்த பின்னே
அனுபல்லவி
மனத்திலுன் திருநாமம் மகிழ்வுடனே துதித்து
தினமுன்றன் வடிவழகை ஆலயத்தில் கண்டபின்
சரணம்
தனக்கென்று வாழும் மனிதரைப் போலன்றி
உனதடியார் திருத்தொண்டில் மனம்தனை வழிநடத்தி
மனக்கவலை சினம் தவிர்த்து பிறர்க்குதவி செய்து
அனைத்தும் கேசவனே உனதருளாலென்றிருக்கும்
No comments:
Post a Comment