குருவாயூர் கேசவன்
பல்லவி
குருவாயூர் கேசவனின் திருவடி பணிந்தேன்
தருமநெறி காக்கும் தவசீலர் பலர் போற்றும்
துரிதம்
நாராயணீயம் எழுதிய பட்டர்க்கு
காளிங்க நர்த்தனம் கண்ணெதிரில் காட்டிய
அனுபல்லவி
அருளமுதமளித்திடும் அழகிய திருமுகமும்
கருணை பொங்கும் கடைக்கண்விழியும் கொண்ட
சரணம்
விரும்பித்துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
பெருநலம் புரிந்திடும் ஶ்ரீமன் நாராயணன்
வருந்தி மனம் திருந்தி சரணடைந்தவர்க்கு
பெரும் பிணி பவக்கடல் கடந்திட உதவிடும்
No comments:
Post a Comment