பாரதி
பல்லவி
பாரதி நீ கதி துதி செய்தேன்
நேரெதிர் வந்தெனக்கருள் தர வேண்டினேன்
துரிதம்
நாரதர் நான்முகன் மலைமகள் அலைமகள்
பாவலர் பண்டிதர் கேசவன் துதித்திடும்
அனுபல்லவி
மாரனும் மயங்கும் ரூபவதி
பாரோர் புகழ்ந்தேத்தும் சகலகலாவாணி
சரணம்
தாரணி போற்றும் தாரகையே வாணி
பூரணி கலைகளின் காரணியே
நாரணி நான்முகி பைரவி நீயே
கூத்தனூர் வளர் ஶ்ரீசரஸ்வதி
No comments:
Post a Comment