இந்தளூர் சுந்தரன்
பல்லவி
சிந்தை கவர்ந்திடும் இந்தளூர் சுந்தரனை
வந்தனை புரிந்து உளமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சந்திரனுக்கருளிய பரிமளரங்கனை
உந்திகமல பெருமானைக் கேசவனை
சரணம்
விந்தையாய் மலைதனைக் குடையாகப் பிடித்தவனை
நந்தகோபன் மகனை தேவகி மைந்தனை
தந்தை சொல் காத்த தனயனை ராகவனை
வந்தருள் புரிந்தெனைக் காத்தருள வேண்டுமென
No comments:
Post a Comment