நித்யகல்யாணப்பெருமாள்
பல்லவி
கல்யாணகோலத்தில் நின்றருளும் கேசவனை
நித்யகல்யாணப்பெருமாளைப் பணிந்தேன்
அனுபல்லவி
கல்யாணம் நல்வாழ்வு அனைத்தையும் அளித்திடும்
வல்வில்ராமனை ஆதிவராகனை
சரணம்
பல்லாண்டு இல்வாழ்வில் நல்லறம் தழைத்திடவும்
இல்லாமை இல்லாது வாழ்வு வளம் பெறவும்
சொல்லாலும் செயலாலும் மனதாலும் நினைவாலும்
எல்லா நலன்களும் எல்லோரும் பெற்றிடவும்
No comments:
Post a Comment