மீனாக்ஷி
பல்லவி
நீயே துணை மீனாக்ஷி
சோமசுந்தரர் உடனிருந்து போற்றும்
அனுபல்லவி
தாயுனையே தஞ்சமடைந்தேன்
மாயே மதுரைவளர் அங்கயற்கண்ணி
சரணம்
ஊழ்வினையால் நான் படுந்துயர் நீங்கி
வாழ்ந்திட வேண்டியே கழலடி பணிந்தேன்
ஏழையெனக்கருள இன்னுமேன் தாமதம்
கோழியூர் மணவாளன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment