தஞ்சமடைந்தேன்
பல்லவி
தஞ்சமடைந்தேன் சஞ்சலம் களைந்தருள்வாய்
பஞ்சபாணப் பயிரவியே காமாட்சி
அனுபல்லவி
நஞ்சரவம் கழுத்தில் சூடிய சிவன் போற்றும்
அஞ்சுகமே அபிராமி அடைக்கலமளித்திடுவாய்
சரணம்
நெஞ்சிலுன் திருநாமம் தினமும் துதித்திருந்தேன்
குஞ்சரிமணவாளன் குகப்பெருமான் தாயே
வஞ்சமில்லாதுன் திருவடியே பணிந்தேன்
பஞ்சவர் நேசன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment